தமிழ்நாடு

தீபாவளி முன்பதிவு முடிந்தது: 3.5 லட்சம் பேர் வெளியூர் பயணம்

DIN

தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள் அனைத்தும் ஏற்கெனவே முன்பதிவு முடிந்தது. இதுவரையில் மொத்தம் 3.5 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர்.
எனினும் கடைசி நேர கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சாதாரண பேருந்துகளில் பயணிகள் செல்வதற்கு புதன்கிழமை (அக்.26) மட்டும் 4 ஆயிரம் பேருந்துகள்இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 28-ஆம் தேதி வரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அக்.26-ஆம் தேதி முதல், அக்.28-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து 11,225 சிறப்புபேருந்துகளும், இதரப் பகுதிகளில் இருந்து 10,064 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளில் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட 4 தாற்காலிக பேருந்து நிலையங்களில் புதன்கிழமை பொதுமக்கள் குவிந்தனர். எனவே. கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கண்ட பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கமும் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்களில் பயணிகள்குவிந்தனர்.
பயணிகள் குழப்பம் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய வழிகாட்டும் வகையில் ஒவ்வொரு போக்குவரத்துக் கழகம் சார்பில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்வதற்கான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 7,8,9 ஆகிய நடைமேடைகளில் இருந்து பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தெந்த பேருந்து நிலையங்களில் நிற்கும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,

தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பெங்களூரு, செங்கானாச்சேரி, கொட்டாக்கரை.
மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையம்: கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகிலும் தாற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம்: திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக அனைத்து வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி பேருந்து நிலையம்: பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக ஆந்திர மாநில ஊர்களுக்குச் செல்லும் அனைத்து தமிழக, ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அண்ணா நகர் (மேற்கு) பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
24 மணி நேரமும் பாதுகாப்பு: அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க 9 நடைமேடைகளிலும், தாற்காலிக பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காவல் துறையினரும் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT