தமிழ்நாடு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் வருகை !

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சையளிக்க புதுதில்லி  ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சையளிக்க புதுதில்லி  ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில், கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிரபல லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே சிகிச்சை அளித்தார்.அதே சமயம் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்  குழுவினரும் அப்பல்லோ வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து 2  பெண் பிசியோ தெரபி நிபுணர்களும் வந்து சிகிச்சை மேற் கொண்டனர். இதனால்  ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப் பட்டது.

இந்நிலையில் தில்லி எய்ம்ஸ் டாக்டர்களில் ஒருவரான பிரபல இதய சிகிச்சை நிபுணர்  நிதிஷ்ராயக், மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சனடிரிக்கா ஆகிய இருவரும், விரைவில் அப்பல்லோ வந்து முதல்வரின்  உடல் நிலை முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT