ரஜினியும் கமலும் எப்படி தீபாவளி கொண்டாடினார்கள் தெரியுமா?
தித்திக்கும் தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை: தித்திக்கும் தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த வரிசையில் திரையுலக பிரபலங்களும் இந்த நாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளி திருநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக, மருத்துவ சிகிச்சையின் பொருட்டு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், வெள்ளிக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.அவர் நேற்று தீபாவளிஎன்று தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன் பேத்திகள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளி திருநாளை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
அதேபோல் 'உலக நாயகன்' கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளார்.
Advertisement
இந்த கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது பரவலாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.