தமிழ்நாடு

கம்பம் அரசு மருத்துவமனையிலிருந்து நோயாளி வெளியேற்றம்: உயிரிழந்ததால் மருத்துவர்கள் மீது புகார்

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் நோயாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

DIN

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் நோயாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கம்பம் உழவர் சந்தை தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (65). இவர் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாலும், அருகில் இருந்து அவரை கவனிக்க உறவினர்கள் யாரும் இல்லை என்பதாலும் உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவமனையில் மறுத்து விட்டனராம். இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை மருத்துவமனைக்கு வெளியே உள்ள நிழற்குடை பகுதியில் மருத்துவமனை ஊழியர்கள் கதிரேசனை விட்டு சென்றுனர். இதுபற்றி அப்பகுதியினர், தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கதிரேசன் குறித்து விசாரித்து, அவரது சகோதரர் ராயர் என்பவரை அழைத்து வந்தனர். இதன்பின் மீண்டும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக கதிரேசனை சேர்த்த போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவத் துறைக்கு சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் பொன்னரசன் கூறியதாவது:
இந்தப் பிரச்னையில் வேண்டுமென்றே சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். கதிரேசன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரவில்லை. அதற்கான ஆவணங்களும் இல்லை. மருத்துவமனையில் கார் நிறுத்தும் இடத்தில் யாரோ சிலர் அவரை கொண்டு வந்து போட்டுள்ளனர். அவரைப் பார்த்த மருத்துவர் ஒருவர், படுக்கையில் சேர்த்துள்ளார். ஆனால் முறையான அனுமதி போடவில்லை. அவருடன் யாரும் இல்லாததால், மருத்துவமனை பணியாளர்கள் வெளியில் கொண்டு போய் விட்டுள்ளனர். மீண்டும் உறவினர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் அவர் உயிரிழந்து விட்டார். சடலம் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

சீன அதிபருடன் பயனுள்ள சந்திப்பு! -பிரதமர் மோடி

நச்... கங்கனா சர்மா!

சென்னையில் Gaming திருவிழா! | Chennai Trade Center | Gamer's Hub | BGMI | PUBG | FIFA | REDBULL

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

SCROLL FOR NEXT