மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு சென்ற பேருந்துகள் தடுத்து நிறுத்தம்
மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த.....
நெய்வேலி: மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுரங்க விரிவாகப் பணிக்காக என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தியது. இச்சாலைக்கு பதிலாக மாற்று வழியில் பாதை பொறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலையில் பேருந்துகள் மற்றும் வாகனகள் இயக்க வேண்டும் என்றும், பழைய சாலை மூடப்படும் என்றும் என்.எல்.சி நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, மந்தாரகுப்பம் பழைய பெட்ரோல் பங்க் அருகே இருந்த என்.எல்.சி அதிகாரிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஆனால், வர்க்ஷாப் கேட், ஆட்டோ கேட் உள்ளிட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.
பின்னர், அதிகாரிகள் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். பழைய சாலையில் வழக்கம் போன்று வாகனங்கள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.