ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயுதப்படை போலீஸார் மர்மச் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸார் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயுதப்படை போலீஸார் மர்மச் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸார் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸார் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், ஈச்சன்விளையைச் சேர்ந்தவர் சீனியப்பன். இவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் சுடர்வேல் (33) என்பவருக்கு கருணை அடிப்படையில் காவலர் வேலை கிடைத்துள்ளது. இவர் பயிற்சி முடித்து 1.2.2011-ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது அணியில் காவலராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் மகன்கள் உண்டு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுடர்வேல் தனது குடும்பத்தை மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் பல இடங்களில் மர்மமான ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து உறவினர் பி.கடோரப்பா வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.