ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருக்கு திருமுக்குளம் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள...
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருக்கு திருமுக்குளம் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள...
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருக்கு திருமுக்குளம் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா தலைமையில் நடைபெற்றது.
அதிமுக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் எம்.சிந்துமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், தொகுதி மற்றும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக சட்டப் பேரவையில் குரல் கொடுத்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் உள்பட அனைத்து பொதுமக்களும் என்னை எளிதில் நேரில் அணுகி, தங்களது கோரிக்கை மனுக்களைத் தரலாம். சட்டத்திற்குட்பட்டு அனைத்து உதவிகளும் எப்போதும் செய்யப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகு அம்மாள், துணைத் தலைவர் அழகர்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக பொருளாளர் கருமாரி எஸ்.முருகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.