தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் போட்டியிட இன்று முதல்செப். 22 வரை விருப்ப மனு அளிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வெள்ளிக்கிழமை முதல் 22-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

DIN

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வெள்ளிக்கிழமை முதல் 22-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
 சென்னை மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும், ஏனைய மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவங்கள் அளிக்கப்படும் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
 இதன்படி, வெள்ளிக்கிழமை (செப். 16) காலை 8.30 முதல் 22-ஆம் தேதி இரவு 8 வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு? மாமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுவுக்கு ரூ.11 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரமும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு ரூ.11 ஆயிரமும், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் விண்ணப்பத்துக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பாளர்கள் நியமனம்: தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கொள்கை பரப்புச் செயலர் மு.தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைப்புச் செயலர் செ.செம்மலை, மருத்துவ அணிச் செயலர் பி.வேணுகோபால் ஆகிய  5 பேர் கொண்ட உயர்நிலைக் குழு பார்வையிடுகிறது.
  மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலர், உயர்நிலையிலான நிர்வாகி அடங்கிய 2 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணி தொடக்கம்: விண்ணப்பங்களை விநியோகிக்கத் தொடங்கியிருப்பதால், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியை அதிமுக தொடங்கியுள்ளது. வழக்கமாக, அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகவே முதலில் பணியைத் தொடங்கும். இதன்படி, உள்ளாட்சித் தேர்தலும் அதிமுகவே பணியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!

SCROLL FOR NEXT