தமிழ்நாடு

புரட்டாசி மாதப் பிறப்பு: பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்

தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை மதுரையில் உள்ள அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

ஜெயப்பாண்டி


மதுரை: தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை மதுரையில் உள்ள அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை முதலே மதுரையில் கூடலழகர், தல்லாகுளம் பிரசன்னை வெங்கடாஜலபதி, அழகர்கோவில் கள்ளழகர் மற்றும் திருமோகூர் அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில் என அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருமோகூர் கோயிலில் காளமேகப் பெருமாள் சன்னதி, அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி என அனைத்து இடங்களிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. கம்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதில் வரிசையாக சென்றனர்.

பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், பக்தர்கள் நெரிசலை தீர்த்து அவர்களை முறைப்படுத்திச் செல்ல நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியரை நிறுத்த இந்து சமய அறநிலையத்துறையும், சம்பந்தப்பட்ட பெருமாள் திருக்கோயில் நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT