பண்ருட்டியில் பஞ்சலோக காந்தி சிலை: சுமார் 50 கிலோ தங்கம் கலந்திருப்பதாக தகவல்
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது.
நெய்வேலி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. இது சுமார் 6 அடி உயரம் உள்ள காந்தியின் முழுஉருவச் சிலை அமைந்துள்ளது. 1950-க்கு முன்னர் இச்சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இது பாரமரிப்பின் போது இதன்மேல் பல அடுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நகராட்சி பூங்காவில் காந்தி சிலை சாய்ந்ததால், நகராட்சி பரமாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
காந்தி சிலையில் உள்ள பழைய வர்ணத்தை நீக்கி புதிய வர்ணத்தை பூச நகராட்சி முடிவு செய்தது. முதலில் வெண்கலத்தால் ஆன சிலை என தெரிய வந்ததாகவும், இதனை தொடர்ந்து சோதனை செய்ததில் பஞ்சலோகத்தால் ஆன சிலை என்பது தெரிய வந்தது. இதில், 20 சதவீதம் தங்கம் கலந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் கணக்கிடுகையில் சுமார் 50 கிலோ தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தகவலறிந்து காந்தி பூங்காவை பார்க்க மக்கள் தற்போது படையெடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆனையர் கூறியது,
நகை செய்யும் பொற்கொல்லர்கள் எஸ்.பி ஜூவல்லரி வைரகண்ணன் அவர்களின் தலைமையிலான பெருநகர விபாரிகள் கொண்ட குழுவினர் நேராய்வு செய்ததில் ஐம்பொன் சிலை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையின் மதிப்பு பல கோடிகள் ஆகும். இதனை பராமரிக்க போர்கால அடிப்படையில் இரும்புகேட், கேமரா மற்றும் காவலர்கள் நியமனம் செய்யும் பணி நகரமன்ற தலைவர் பி.பண்ணீர்செல்வம் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிலை பண்ருட்டி நகராட்சிக்கு கிடைத்த சொத்தாகும் என்பதால் அசையசொத்து பதிவெட்டில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என ஆனையர் பெருமாள் தெரிவித்துள்ளார்.