தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

DIN

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சித் தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம் தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி, பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப் பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன், திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலை வரும் 26-ஆம் தேதிக்குள் தயார் செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில் சேர்த்து வெளியிடப்படும்.
வாக்குச்சாவடி சீட்டுகள் ("பூத் சிலிப்'): உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை வரும் 27-இல் தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் - முதல்வர் Stalin

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தெரியவில்லை.. வந்தால் பதில் சொல்கிறேன்: ஓபிஎஸ், செங்கோட்டையன் வருகை குறித்து இபிஎஸ்!

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் வாமிகா கபி!

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது!

SCROLL FOR NEXT