ஆந்திராவில் கன மழை, வெள்ளம்: ரயில் சேவை பாதிப்பு
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விஜயவாடா: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக குண்டூர் - நடிகுடி இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால், குண்டூர் - செகுந்தராபாத் இடையேயான பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
நேற்று குண்டூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் 10 முதல் 21 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பல இடங்களில் கயிறுகளைக் கட்டி மக்கள் சாலைகளைக் கடந்து வருகின்றனர்.
உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.