மம்சாபுரத்தில் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான....
தமிழ்நாடுமம்சாபுரத்தில் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான....
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஏராளமானோர் ஈடுபட்டதால் அப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மம்சாபுரம் கீழூர் பறையர் சமுதாயத்திற்குச் சொந்தமான அக்கினி மாரியம்மன் கோவில் மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ளது. இதன் அருகில் உள்ள குறிப்பிட்ட இடத்தை, அலுசோடை தேவர் மகன் கூடலிங்கம் என்பவர் ஆக்கிரமித்துள்ளாராம். இதனை அப்புறப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நடவடிக்கை இல்லாததையடுத்து, சமுதாயத் தலைவர் கலை, கண்ணன், தங்கம், பொன்னையா உள்ளிட்ட ஏராளாமானோர் மம்சாபுரம்-ராஜபாளையம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துணைக் கண்காணிப்பாலர் சி.சின்னையா, காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார், வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியாக பிரச்னைக்குரிய இடத்தை அளந்து எடுத்துக் கொள்வதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக சிவந்திபட்டி கிராம நிர்வாக அலுவலர் வேதமாணிக்கம், மம்சாபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்திற்கும், பொதுஜன அமைதிக்கும் பங்கம் விளைவித்து சட்ட விரோதமாய் சாலை மறியலில் பெயர் குறிப்பிட்ட 22 பேர் மற்றும் சிலர் ஈடுபட்டதாய் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.