பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரு.2.70 லட்சம் கொள்ளை
பண்ருட்டி வட்டம் ஆசிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40) நெய்வேலி வட்டம் 21ல் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.
பண்ருட்டி: பண்ருட்டி வட்டம் ஆசிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40) நெய்வேலி வட்டம் 21ல் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துடன் நண்பர்களாக அனந்தராமன், செல்வக்குமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருநதார்.
இவர்கள் பேர்தெரியான்குப்பத்தில் இருந்து ஆசிரிக்குப்பம் சென்று கொண்டிருந்த போது முந்திரிகாட்டில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து தாக்கி ரூ.2.70 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.