தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: முதல்நாளில் 4,748 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 4, 748 பேர் மனு செய்தனர்.

DIN

சென்னை உள்பட 12 மாநராட்சிகளுக்கான வார்டுகளில் போட்டியிட 2 பேர் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தனர். மேலும், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட மனு செய்யவில்லை. ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 31 பேரும், ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 201 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 4,507 பேரும் மனு செய்துள்ளனர். நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேரும் என 4,748 பேரும் மனு செய்தனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 3-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த மனுக்கள் அக்டோபர் 4-ல் ஆய்வு செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் பெண் உள்பட 2 தீவிரவாதிகள் கைது!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்: மீனவர்கள் அதிர்ச்சி!

சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

சவரனுக்கு ரூ.1,800 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT