தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் நாளொன்றுக்கு ஓரடி குறைகிறது

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க மறுத்து, அங்குள்ள அணைகளை மூடிவிட்டது.
இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 634 கன அடியாகக் குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 84.34 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், திங்கள்கிழமை காலை 83.39 அடியாகக் குறைந்தது. நீர்வரத்தைவிட காவிரி டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 45.41 டி.எம்.சி. மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT