தமிழ்நாடு

இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழகம் முன்னணி: அமைச்சர் மணிகண்டன்

DIN

அரசு இ-சேவை மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு "கனெக்ட்-2016' கருத்தரங்கம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ரவி விஸ்வநாதன் உள்பட பல முன்னணி நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
விழாவில், அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது: தமிழக முதல்வர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 98 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.2,42,160 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
அதோடு, 4,70,000 நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில் 17 நிறுவனங்களிடமிருந்து ரூ.10,950 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த துறையில் மட்டும் 2 லட்சத்து 5,500 பேர் பயன்பெறுவர்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனங்களுக்கு உதவிபுரிவதிலும், அரசு இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 10,486 மையங்கள் செயல்படுகின்றன. இதில், கடந்த ஜூலை வரையில் மட்டும் 1.96 கோடி தகவல் பரிமாற்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் "தமிழகம்-2023' தொலைநோக்கு திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சீரிய திட்டங்கள்,சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளார் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்கிய, தமிழநாடு அரசு இ-சேவை நிறுவனம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், "ஒமேகா ஹெல்த்கேர்', "ராம்கோ சிஸ்டம்ஸ்' உள்ளிட்ட அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT