தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: பொது இடங்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்படும்

DIN

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் சுவர் விளம்பரம், விளம்பர தட்டிகள், கட்சிக் கொடிகளை அகற்ற மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17,19 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில அளவில் அரசு பொது இடங்களில், தனியார் இடங்களில் எந்த ஒரு அரசியல் கட்சி சார்புடைய சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகள் இருந்தால் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, அரசியல் கட்சிகளின் கொடிகள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT