தமிழ்நாடு

புதுச்சேரியில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

தினமணி

புதுச்சேரி: கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி  புதுச்சேரி பிரதேச கைத்தறி தொழிலாளர்கள் (சிஐடியு ) சங்கம் சார்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகம் முன்பு இராட்டை சுற்றி மற்றும் கஞ்சி காய்ச்சி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல், குறைந்தபட்ச கூலியாக ரூ.350 நிர்ணயம் செய்தல், ஆண்டு முழுதும் நெசவாளர்களுக்கு வேலை தர வேண்டும், பிரதம நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும்.

கூட்டுறவுத்துறை பதிவாளர் மேற்பார்வையில் நூல் வங்கியை உருவாக்க வேண்டும், நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க வேண்டும், மழைக்கால மானியத்தை ரூ.1500-ல் இருந்து ரூ.3000-ஆக உயர்த்த வேண்டும்.
30 சதவீதம் ஊக்கத்தொகையை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும், பிரதம சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம், பணபயன் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். தலைமைச் சங்கமான பாண்டெக்சில் உள்ள காலிப் பணியிடங்களில் பிரதம கூட்டுறவு சங்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்ரது.

சங்கச் செயலாளர் ஆர்.குணசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் டி.முருகன், ஆர்.ராஜாங்கம், கே.முருகன், வி.மனோகரன், ஆனந்து, தேவி, வசந்தி உள்பட பலர் பங்கேற்றனர். பி.சங்கர் நன்றி கூறினார். 100-க்கு மேற்பட்டோர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT