முகப்பு
தமிழ்நாடு

ஆர்.கே. நகரில் திமுகவின் வெற்றி தமிழகத்தில் விடிவை ஏற்படுத்தும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கவுள்ள வெற்றி தமிழகத்தில் நல்லதொரு விடிவுகாலத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:11 PM
பகிர்:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கவுள்ள வெற்றி தமிழகத்தில் நல்லதொரு விடிவுகாலத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக வர்த்தக அணி நிர்வாகியின் இல்லத்திருமண விழா சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசியது: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கவுள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவு காலத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் மிக விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி வருகிறார்கள். நம் சந்ததியினர் இந்த நாட்டில் நலமோடு வாழ, நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கித் தருவதற்கு, நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு: மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது. 1965 ஆண்டில் நம்முடைய மொழிக்கு ஒரு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் எத்தனையோ தியாகங்களை செய்து தடுத்துக் காட்டினோம். அந்தநிலை மீண்டும் வரக்கூடாது. நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் இடம்பெறும் நிலை உருவாகி இருக்கிறது. இதனை அனைவரும் சிந்திக்க வேண்டும். நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நமது தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டும். அதற்கான எத்தனையோ பணிகளில் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →