தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் அதிமுக செயலாளருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பாக நடைபெற்று வரும் இடைத் தேர்தல் பிரசாரம் நாளை திங்கள்கிழமை (ஏப்.10) மாலை 5 மணிக்கு

DIN

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பாக நடைபெற்று வரும் இடைத் தேர்தல் பிரசாரம் நாளை திங்கள்கிழமை (ஏப்.10) மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

இந்நிலையில், ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து எழில் நகர் 47-வது வட்ட பகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் நித்யானந்தம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கும்பலாக வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிற கட்சியினர் சிதறி ஓடினார்கள்.

தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை ஆணையர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர், நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யானந்தத்ததை வெட்டியது சசிகலா ஆதரவாளரும் ஈரோடு மாவட்ட செயாலாளருமான ராமலிங்கம் என்று பன்னீர்செல்வம் அணியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஆர்.கே.நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT