தமிழ்நாடு

தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே எந்தவித மாற்றமும் வரப் போவதில்லை: விஜயகாந்த்

DIN

இடைத்தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகர் தொகுதியில் ஆரம்பம் முதலே வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடைபெற்றது. எனவே, வெறும் தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே இங்கு எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை.
இதேபோலத்தான் அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பண விநியோகமும் நடைபெற்றது. ஆளும் கட்சிதான் தேர்தலில் வெற்றிபெற்றது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அவ்வாறு இல்லாமல் இரும்புக் கரம் கொண்டு, பணம் பட்டுவாடா செய்த அதிமுக அம்மா அணி, திமுக ஆகிய இரு கட்சி வேட்பாளர்களையும் இந்தத் தேர்தலில் இருந்து தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும்.
அப்போதுதான் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT