தமிழ்நாடு

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை: தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களம் கண்ட மாணவர்கள்!

DIN

சென்னை: தில்லியில் 28 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிணைந்து, இன்று நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.

வறட்சி நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களில் சிலர் தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியைக் கண்டித்து, முழு நிர்வாண போராட்டடத்தில் கூட ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவது அதிர்ச்சியலைகளை உண்டாக்கியது.

இந்நிலையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதிகமான அளவில் இன்று ஒன்றிணைந்து, நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.

அங்கு அவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து கோஷமிட்டனர். அருகில் உள்ள ஹாடோஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலை ஈடுபடவும் சிலர் முயன்றனர்.  அவர்களில் சிலர் அரை நிர்வாண கோலத்திலிருந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT