தமிழ்நாடு

மாஃபா பாண்டியராஜனின் முன்ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு!

சென்னை ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில்...

DIN

சென்னை: ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கான  தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் செய்யப்பட்ட பொம்மையொன்றுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அந்த பெட்டியின் மீது தேசியக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவிருந்த நிலையில் தற்பொழுது ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT