தமிழ்நாடு

தமிழகத்தில் நூறு சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமம் எது தெரியுமா பாஸ்?

DIN

சென்னை: தமிழகத்திலேயே நூறு சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடவானூர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்த்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழகத்திலேயே நூறு சதவீதம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடவானூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் வெங்கடேசன் மற்றும் சுதாவிடம் இந்த தகவலை தெரிவித்து அதற்கான சான்றையும் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT