முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர்: டிடிவி தினகரன் பேட்டி

அதிமுகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன்தான் உள்ளனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

சென்னை: அதிமுகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன்தான் உள்ளனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்கும் கூட்டம் அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்.19) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் தான் உள்ளனர். அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை.

தற்போது நிலவி வரும் குழப்பத்திற்கு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட முடிவு செய்து, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →