தமிழ்நாடு

முதல்வரை சந்திக்க முடியவில்லை; கோமா நிலையில் தமிழக அரசு: ஸ்டாலின் பேச்சு

DIN


சென்னை: தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்து கோமா நிலையில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்த பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டக் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்தோம். பேரவையைக் கூட்டுவது பற்றி முதல்வரிடம் பேசி முடிவு எடுத்து அறிவிப்பதாக சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்னை குறித்து பேரவையில் பேச வேண்டும். முதல்வரை சந்தித்து மனு அளிக்க முயன்றும் முடியவில்லை.

அதிமுக பிரச்னையில் தலையிடுவது திமுகவின் மரபல்ல. ஊரைக் கொள்ளையடித்து ஒன்றாக இருந்தவர்கள் தற்போது பிரிகிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT