தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த முடியாது: செங்கோட்டையன் பேட்டி

DIN

சென்னை: அதிமுக தலைமைக்கழகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த முடியாது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்கும் கூட்டம் அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்.19) மாலை 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுக தலைமைக்கழகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த முடியாது என்று அதிமுக அவைத்தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதையடுத்து கூட்டம், போட்டி கூட்டம் என்று எதுவும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 8 எம்.எல்.ஏ-க்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அமைச்சர் தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி),  ஜக்கையன் (கம்பம்), செல்வமோகன் தாஸ் (தென்காசி), கதிர்காமு (பெரியகுளம்), சுப்பிரமணி (சாத்துார்), வெற்றிவேல் (பெரம்பூர்), ஏழுமலை (பூந்தமல்லி), சின்னத்தம்பி (ஆத்தூர்) மற்றும் கருணாஸ் (திருவாடனை) உள்ளிட்ட 8 பேர் மட்டுமே அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தினகரனுக்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், வி.கே.சசிகலா-டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் 50-க்கும் அதிகமான பேரவை உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி இருக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT