முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 20 ஏப்ரல், 2017 at 11:38 AM
பகிர்:

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து, ஆளுநருடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் 2 அணிகள் இணைய பேச்சு நடக்க உள்ள நிலையில் தம்பிதுரை, ஜெயக்குமாரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் புதிய அமைச்சரவை குறித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.