முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை மீது செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ புகார்

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மீது, அரவக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்

Updated On : 21 ஏப்ரல், 2017 at 10:42 AM
பகிர்:

கரூர்: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மீது, அரவக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் கரூர்  மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மேலும், 229.46 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டது.

ஆனால், ,அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளார்.

Advertisement

மேலும் அந்த புகார் மனுவில், இரண்டு பேரையும் கண்டித்து வரும் வரும் திங்கள்கிழமை (ஏப்.24) காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.