தமிழ்நாடு

3 நாள் அவகாசம்: தினகரன் கோரிக்கையை நிராகரித்தது தில்லி போலீஸ்

DIN


சென்னை:  இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக 3 நாள் அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நாளைக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தில்லி குற்றப்பிரிவு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக டிடிவி தினகரனுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்த தில்லி போலீஸார், அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு காவல்துறை முடிவுசெய்தது.  

இது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்த தில்லி குற்றப்பிரிவு காவல்துறை, வரும் சனிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னைக்கு நேரில் வந்து அவரிடம் சம்மன் அளித்தனர்.

இதன்படி தில்லி குற்றப்பிரிவு போலீஸார் முன்பு டிடிவி தினகரன் நாளை ஆஜராக வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT