தமிழ்நாடு

அதிமுக பிளவை பயன்படுத்தி ஆதாயம் தேடும் பாஜக

அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு கிடப்பதைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு கிடப்பதைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக 2 அணிகளாகப் பிரிவது அல்லது இணைவது என்பது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம் என்றபோதும், இவர்களின் மோதலால் ஏராளமான இழப்புகளை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு செயலற்று முடங்கிப் போயுள்ளது.
வரலாறு காணாத வறட்சி, கடும் குடிநீர் பஞ்சம், 'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என தமிழக மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த இரு அணிகளும் மேற்கொள்ளும் சமரச முயற்சிகள், எள்ளளவும் தமிழக மக்கள் நலன் சார்ந்ததல்ல. இந்த நிலையில், அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு கிடப்பதை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT