தமிழ்நாடு

புதுவை முதல்வர், அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகள் அகற்றம்

தினமணி

மத்திய அரசின் உத்தரவு எதிரொலியாக புதுவை மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
மத்திய அரசு உத்தரவின் பேரில் நானும், பேரவைத் தலைவர், துணைத்தலைவர் அமைச்சர்கள், மற்றும் அரசு கொறடா, முதல்வர் நாடாளுமன்றசெயலர், தில்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் தங்களது வாகனத்தில் இருந்த  சிவப்பு நிற சூழல் விளக்கை அகற்றி விட்டோம். மத்திய அரசு முடிவை பின்பற்ற வேண்டியது, மாநில அரசின் கடமை. அதை நாங்கள் செய்து உள்ளோம் என்றார்.

மேலும்  வாரியத்தலைவர்கள் காரில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.

ஏற்கெனவே ஆளுநர் கிரண்பேடி தனது வாகனத்தில் சிவப்பு சுழல் விளக்கை அகற்றியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT