முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் போராடும் விவசாயிகள் தற்காலிகமாக கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

தில்லியில் போராடும் விவசாயிகள் தற்காலிகமாக தங்களது போராட்டங்களை கைவிட்டுவிட்டு பொதுவேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:21 PM
பகிர்:

சென்னை: தில்லியில் போராடும் விவசாயிகள் தற்காலிகமாக தங்களது போராட்டங்களை கைவிட்டுவிட்டு பொதுவேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு வலு சேர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

பொதுவேலைநிறுத்தத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வேண்டும். இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவுக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தை கைவிட்டுவிட்டு வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசப்படும் என்று கூறினார்.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை மாலை (ஏப்.22) நடைபெறுகிறது.  

திமுக சார்பில் ஏப்ரல் 16 -ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னைக்காக ஏப்ரல் 25 -ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் தொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம், மயிலை மாங்கொல்லையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.வீரப்பன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →