தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

DIN

திண்டுக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் தொடரும் என்று என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.50.29 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் சி.சீனிவாசன் வழங்கினார்.
30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.57,800 மதிப்பீட்டிலான மாற்றி வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.17,34,000 மதிப்பீட்டிலும், திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.4.38 லட்சம் மதிப்பில் தங்கம், நிதியுதவியாக ரூ.13 லட்சம் வழங்கப்பட்டது.
 மேலும் வருவாய்த்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட மொத்தம் 212 பயனாளிகளுக்கு ரூ.50.29 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுன.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியால் இந்த ஆட்சி 10 மாதத்தை கடந்து நல்லாட்சி நடந்து வருகிறது. இது போன்ற திட்டங்கள் அனைத்தும் 4 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றித் தரப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதிபடி 100 க்கு 100 சதவீதம் நலத்திட்ட உதவிகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும்.

122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அவரது தலைமையிலான ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளர் பணிக்கு நேரடியாக தேர்வு நடந்து வருகிறது. இந்த பணியில் சேர யாரும் பணம் கொடுக்க வேண்டாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தீர்க்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு உத்தரவுப்படி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்வார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT