தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக்கொலை, மற்றொருவர் படுகாயம்

DIN

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் மொத்தம் 16 கேட் உள்ளது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்தி வந்த 7ஆவது கேட்டில் கிஷன்பகதூர்(52), ஓம்பகதூர்(55) ஆகியோர் நேற்றிரவு வழக்கம்போல் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கிஷன்பகதூரை கயிற்றால் கட்டிவிட்டு திடீரென தாக்கினர். பிறகு ஓம்பகதூரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த தாக்குதலில் ஓம்பகதூர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிஷன்பகதூர் படுகாயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொடநாடு எஸ்டேட்டை சுற்றி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. யாரும் நுழைய முடியாத கொடநாடு எஸ்டேட்டில் காவாளி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT