தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்

DIN

சென்னை: முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், தில்லி, ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக பல்வேறு நூதனமான போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை (ஏப்.,25) காலை சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விவசாயிகளுக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிலையில், தில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்து சேர்ந்த விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT