தமிழ்நாடு

கீழடியில் தமிழக அரசே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்

DIN

கீழடியில் தமிழக அரசே அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மதுரைக்கு அருகே கீழடியில் கி.மு. 3 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர்ப்புற நாகரிகத்தின் தடயங்களைக் கண்டறிந்து, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்த அகழ்வாராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்திய தொல் ஆராய்ச்சித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை திடீரென அசாமுக்கு மத்திய அரசு மாற்றியது.
கண்டனம்: மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா வரும் 27 -ஆம் தேதி மதுரைக்கு வந்து கீழடி ஆய்வைப் பார்வையிட இருப்பதால் அமர்நாத் அவசர அவசரமாக பதவிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்தை அமைச்சர் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி தொடரும் என நாடகம் நடத்த உள்ளார். இந்தியாவிலேயே தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என்பது மூடி மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய அரசு இவ்வாறு செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். வைகை ஆற்றின் கரையோரம் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர் நாகரிக தடயங்கள் இருப்பதாக அமர்நாத் கண்டறிந்துள்ளார்.
எனவே, தமிழக தொல் ஆராய்ச்சித் துறைக்கு அவரை மாற்றும்படி மத்திய அரசை வற்புறுத்திப் பெற்று, அவர் தலைமையில் தமிழக அரசே இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT