தமிழ்நாடு

முடங்கிக் கிடக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்

DIN

தமிழகத்தில் முடங்கிக் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக வாக்குறுதி அளித்து 2011 -ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு தொலைநோக்கு - 2023 என்ற பெயரில் திட்டத்தை 2012 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டார். அதன்பின் 5 ஆண்டுகளாகியும் இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்தத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய 10 முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடப்பதை நாளிதழ் ஒன்று தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான 8 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இத்திட்டங்களை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இந்தியாவின் கடைசி மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெறப்போவது உறுதி என அன்புமணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT