தமிழ்நாடு

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார்? ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில்

DIN


சென்னை: அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதில், அதிமுக பொதுச் செயலர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை. அதிமுகவில் உட்கட்சி பிரச்னை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், அதிமுக பொதுச் செயலர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருந்த நிலையில், பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேறி, தன்னை மிரட்டியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக பகிரங்கமாக பேட்டியளித்தார்.

இதனால், அதிமுக இரண்டாக உடைந்தது. இரு அணிகளும் அதிமுகவின் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று மனு கொடுத்தனர். இதனால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரையும் கட்சி சின்னமும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT