தமிழ்நாடு

உருளைக்கிழங்கு கிலோ ரூ.8-க்கு விற்பனை: கவலையில் விவசாயிகள்

தினமணி

நீலகிரி மாவட்டத்தில்  உருளைக்கிழங்கு கிலோ ரூ. 8-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறி விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில்,  காரட், பீட்ரூட்,  முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.  இதனால்,  நீலகிரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.  இதன் மூலம்,  ஆண்டொன்றுக்கு ரூ. 6 கோடிக்கும் மேல்  உருளைக்கிழங்கு  விற்பனை நடைபெறுகிறது.

கடந்த காலங்களில் 45 கிலோ கொண்ட 1 மூட்டை உருளைக்கிழங்கு ரூ. 1,400 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.  ஒரு சில நேரங்களில் 1 மூட்டை உருளைக்கிழங்கு ரூ. 2,500 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது,  உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் 1 மூட்டை உருளைக்கிழங்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை சில்லறைக் கடைகளில்  1 கிலோ ரூ. 8 முதல் ரூ. 12 வரை விற்பனை செய்து வருகின்றனர். உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சசிகுமார் என்பவர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு வரத்து போதிய அளவில் இல்லாததால் கிலோ ரூ. 40 வரைக்கும் விற்பனையானது. 

வெளி மாநில வரத்து அதிகரிப்பால் தமிழகத்தில் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  வரும் நாள்களில் இதன் விலை மேலும் சரியும் வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT