தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்தினை  'தேடப்படும் நபராக' அறிவித்த நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! 

DIN

சென்னை: கார்த்தி சிதம்பரத்தினை  'தேடப்படும் நபராக' அறிவித்த நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் காரணமாக , முன்னாள் மத்திய அமைச்சர்

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, பாஸ்போர்ட் சட்டத்தின்படி மத்திய உள்துறை அமைச்சகம் 'தேடப்படும் நபராக' அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்து கடந்த 4-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இம்மாத இறுதியில் தான் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 'லுக் அவுட்' நோட்டீஸ் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு அறிவிப்பதாக அரசு வழக்குரைஞர் கூறியதை அடுத்து வழக்கு 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கார்த்தி சிதம்பரத்தின் வேண்டுகோளினை ஏற்று,  அவர் மீதான 'தேடப்படும் நபராக' அறிவித்த லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT