தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் 3 வகையான சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

DIN


கோபிசெட்டிபாளையம்: தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வகையான சீருடைகள் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம், நாகதேவன் பாளையம், சிறுவலூர், அயலூர் மற்றும் கோபி சட்டப்பேரவை தொகுதிகளில் ரூ.1 கோடி 24 லட்சம் செலவில் நடைபெற உள்ள சாலை பணிகளை பூமிபூஜை செய்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3 வகையான சீருடைகள் விரைவில் கொண்டுவரப்படும். அதாவது 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கும் என 3 வகையான சீருடைகள் விரைவில் கொண்டு வரபடுகிறது.

பிளஸ்-1 தேர்வில் மாணவ-மாணவிகளுடைய சந்தேகங்களை நீக்குவதற்கு, இரண்டரை மணி நேர வினா தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசு அனுமதியும் கிடைத்து விட்டது. மாதிரி வினா தாள் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் அளிக்கப்படவுள்ளது.

அவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பிளஸ்-2 படித்துக் கொண்டே ஜுன் மாதத்தில் அந்த தேர்வை எழுதலாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT