தமிழ்நாடு

தொழில் தொடங்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

DIN

தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.
சென்னை ஏற்றுமதி மண்டலம் (மெப்ஸ்) சார்பில், ஏற்றுமதியில் சிறந்த விளங்கிய நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் அமைச்சர் சம்பத் பேசியது:
தொழில் துறைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பு அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளையும் ஒற்றைச் சாளர முறையில் செய்து தரத் தயாராக உள்ளோம். மத்திய அரசும், தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதிய தொழில் நிறுவனங்கள் இங்கு அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இந்தியாவில் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011-16- ஆம் ஆண்டு காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு ரூ.1 லட்சத்து 25,970 கோடி ஈர்க்கப்பட்டது. 2018- ஆம் ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 267 ஏக்கரில் வான்வெளிப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா வரும்போது, வானவூர்தி, மின்னணுவியல், உதிரிபாகங்கள் தயாரிப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம், பொது சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகிய வசதிகள் இருக்கும். இதன்மூலம், இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளித் திட்டங்களை ஈர்க்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT