தமிழ்நாடு

நீட் தேர்வில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது: ம.நடராசன்

DIN


தஞ்சாவூர்: நீட் தேர்வில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இதனை எதிர்த்து உயிர் உள்ளவரை போராட வேண்டும் என்று புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் கூறியுள்ளார்.

தஞ்சை முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் ஈழபோர் குறித்து ஓவியம் வரைந்த ஓவியர் வீரசந்தானத்தின் படத்திறப்பு விழா இன்று நடந்தது.

இதில், கலந்துகொண்ட ம.நடராசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இதனை எதிர்த்து உயிர் மூச்சு உள்ளவரை போராட வேண்டும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் மத்திய அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக கொண்டுவரப்பட்டது. அவர்கள் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்லும் போது அவர்கள் குழந்தை படிப்பதற்காக இந்த பாடத்திட்டத்தை உருவாக்கினர்.

ஆனால், தற்போது அதனை அனைத்து மாணவர்களுக்கும் நடைமுறை படுத்த முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT