முகப்பு
தமிழ்நாடு

கமலின்  குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்: டிடிவி தினகரன்

கமலின்  குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

கமலின்  குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
தமிழகத்தில் உள்ள ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  மக்களுக்கு யார் திருடர்கள் என்பது நன்றாக தெரியும். கமல் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் பதில் சொல்ல வேண்டும்.

சசிகலாவில் காலில் விழுந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டால் அவருக்குத்தான் அசிங்கமாகும். பதவி விலகிட்டு திண்டுக்கல் சீனிவாசன் பேச வேண்டும். கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது. ஆர்கே நகரில் தேர்தல் பணியாற்றியவர் தற்போது பயத்தில் பேசுகிறார்கள். விலகிச் செல்லும் ஓபிஎஸ் உடன் சேரத் துடிக்கிறார்கள்.

கட்சியை கொல்லைப்புறமாக கைப்பற்றும் முயற்சியில் சில அமைச்சர்கள், நிர்கவாகிகள் முயற்சிக்கின்றனர். சரியான பாதையில் செல்லாவிட்டால் ஆபத்து அவர்களுக்குத்தான். எடப்பாடி யார் என்பது கண்ணாடி முன்னாடி நின்றால் ஜெயக்குமாருக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →