தமிழ்நாடு

கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது

DIN

சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை 5.30 மணியவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

சாதாரண பரிசோதனைக்காகவே கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய அளவிலான சிகிச்சைக்கு பின்னர் இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார். கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை நல்லமுறையில் முந்ததாகவும், மருத்துவமனையில் இருந்து கருணாநிதி சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT