தமிழ்நாடு

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் எதிர் கோஷம்; சலசலப்பு!

DIN

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக வருவாய்த் துறை சார்பில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற,  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வில், குறிப்பிட்ட பிரிவினர் எதிர் கோஷம் போட்டதால் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. 

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தமிழக வருவாய்த் துறை சார்பில், முதல்வர் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம அலுவலர்கள் சங்கம், வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

நிகழ்வில் வருவாய்த் துறை ஊழியர்களுக்கு என பல்வேறு சலுகை அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். ஆனால் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினரின் மிக முக்கியமான கோரிக்கையான காலமுறை ஊதியம் கோரிக்கை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த குறிப்பிட்ட சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கே  சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து ஊழியர் சங்கத்தினரைச் சேர்ந்தவர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT