தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

தினமணி

சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலிடம் ரூ.2.43 லட்சம் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது 2010ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடார்பான வழக்கு கோவை 2ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT