தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

DIN

சென்னை: சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளுக்கு சொத்து வரி எப்போது உயர்த்தப்படும் என்று உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் அமைந்துள்ள கடைகளுக்கான வரி சீரமைப்பு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றதில் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளுக்கு சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? வரும் 21-ஆம் தேதிக்கு முன்னதாக அது பற்றி ஒரு முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரும்.

கடந்த 10 வருடங்களாக சொத்துவரி உயர்த்தப்படாததன் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.1840 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மற்ற உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் சொத்து வரி சீரமைப்பு செய்திருக்கும்போது சென்னை மாநகராட்சி மட்டும் அவ்வாறு மாறாமல் இருப்பது ஏன்? தற்பொழுது சென்னை நாகராட்சியினை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருவதால், இது சாத்தியமான ஒன்றுதான்.

நீதிமன்றம் இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT